டெல்லி: சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு, பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. நேரடி வகுப்பு களும், ஆன்லைன் வகுப்புகளும் தொடர்கின்றன. இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்தது.
அதன்படி, முதல் பகுதி தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களி லும், 2-வது பகுதி தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு 1ம் பருவ தேர்வு நவம்பர் 30 ம் தேதி தொடங்குகிறது
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு 1ம் பருவ தேர்வுகள் டிசம்பர் 1 ம் தேதி முதல் தொடங்குகிறது
இன்று பருவத்தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும், பள்ளிகளால் நடத்தப்படும் சிறு பாடங்களுக்கான தேர்வு தேதிகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவை, நவம்பர் 17 முதல் 12 ஆம் வகுப்பிற்கும் நவம்பர் 16 ஆம் தேதி 10 ஆம் வகுப்பிற்கும் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பருவத் தேர்வுக்கு பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions என்ற வகையில் வினாத்தாள் அமைக்கப்படும் என்றும், குளிர்காலம் என்பதால் தேர்வுகள் காலை 11.30 மணி முதல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பருவநிலை -1 பொதுத் தேர்வுகள் 90 நிமிட அவகாசம் கொண்ட அப்ஜெக்டிவ் (MCQ) வகைத் தேர்வாக இருக்கும்” என்று சிபிஎஸ்இ (CBSE) தெரிவித்துள்ளது/
CBSE Class 12 date sheet – Humanities stream
Dec 1 – sociology
Dec 3 – English core
Dec 7 – Physical education
Dec 9 – Geography
Dec 11 -Psychology
Dec 15 – Economics
Dec 17 – Political Science
Dec 20 – History
CBSE Class 12 date sheet – Commerce stream
Dec 3 – English core
Dec 6 -MAthematics
Dec 7 – Physical education
Dec 8 – Business studies
Dec 13 -Accountancy
Dec 15 – Economics
Dec 21 – Informatic Prac