சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்திய சாட்-ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தேடுதளம் மூலம் மாணவர்கள் தங்களுக்கு சவாலாக உள்ள பல்வேறு பாடங்களுக்கான விடைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ள உதவும்.

சாட்-ஜிபிடி உதவியைக் கொண்டு தேர்வுகளில் கேட்கப்படும் சவாலான கேள்விகளுக்கு விடையளிப்பது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளின் பல்வேறு பல்கலைக்கழங்கங்களில் மாணவர்கள் சாட்-ஜிபிடி மூலம் பதிலளிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதை முறியடிக்க கல்லூரி நிர்வாகம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று துவங்கியுள்ள சிபிஎஸ்இ கல்வி வாரிய தேர்வுகளில் சாட்-ஜிபிடி பயன்படுத்தும் வகையில் உள்ள மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டுவரக் கூடாது என்று தேர்வு வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ள புதிய AI செயலி… Copy + Paste க்கு ஆப்பு