சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு…

Must read

டெல்லி:
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 வருது மற்றும்  12வது வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருந்த சிபிஎஸ்சி தேர்வுகள், கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தற்காலிக  தள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தேர்வு தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒத்திவைக்கப்பட்டிருந்த  சிபிஎஸ்இ 10ம், 12ம் வகுப்பு  பொதுத் தேர்வுகள்  ஜுலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள்   நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article