டில்லி

ஞ்ச வழக்கில் கைதான டில்லி பல்மருத்துவ கவுன்சில் பதிவாளரின் இல்லத்தில் டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று தில்லி பல் மருத்துவக் கவுன்சில் பதிவாளர் ரிஷி ராஜ் மருத்துவர் ஒருவரிடம் ரூ. 4.7 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார்.   அப்போது அவரைக் சிபிஐ அதிகாரிகள் பிடித்ஹுள்ளனர்.   அத்துடன் அந்த கவுன்சிலில் வழக்கறிஞர் பிரதீப் சர்மாவும் கைது செய்யப்பட்டார்.    கைதையொட்டி சிபி அதிகாரி ரிஷி ராஜின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தனர்.

சோதனையின் போது டில்லி மாநில பொதுப்பணி, சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சம்பனதப்பட்ட் சொத்துக்களின் ஆவணங்கள் கிடைத்துள்ளன.  தில்லியிலுள்ள கராலா என்னும் பகுதியில் சதேந்திர ஜெயின் பெயரில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களும்,  அவரது மனைவி பூனம் மற்றும் அவர் பெயரில் உள்ள காசோலை புத்தகங்கள் கிடைத்துள்ளன.  மேலும் அவர் செய்துள்ள ரூ. 2 கோடி வங்கி முதலீட்டு ஆவணங்களும் கிடைத்துள்ளன.

இந்த சொத்து ஆவணங்களுடன் அரை கிலோ தங்கமும் ரூ. 24 லட்சம் ரொக்கமும் கிடைத்துள்ளன.   இவைகளும் சத்தியேந்திர ஜெயினுக்கு சொந்தமானவையாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.   எனவே சிபிஐ அதிகாரிகள் அமைச்சரிடம் நேரில் விளக்கம் பெற உத்தேசித்துள்ளனர்.

கடந்த வருடம் ஜெயின் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்தது.   அப்போது சிபிஐ அவர் வீட்டில் சோதனை இட்டது.   அந்த சோதனையில் இந்த ஆவணங்கள்  சிக்காமல் இருக்க ரிஷி ராஜின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் என ஐயம் உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.