மும்பை

த்திய வரி வாரிய தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக  வருமானவரித்துறை ஆணையர் புகார் கூறி உள்ளார்.

                                                       பிரமோத் சந்திர மோடி

மும்பை வருமான வரி அலுவலகத்தில் வருமானவரி தலைமை ஆணையராக உள்ள அல்கா த்யாகி என்பவர்  பணி புரிந்து வருகிறார்.  தீபக் கோசார், ஐ.சி.சி.ஐ வங்கி வழக்கு, அம்பானி குடும்பத்தினர் மீதான கருப்பு பண வழக்கு, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை அல்கா த்யாகி விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அல்கா தியாகி

அல்கா தியாகி பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சருக்குக் கடந்த ஜூன் 21ம் தேதி எழுதிய அல்காவின் புகார் கடிதத்தின் விவரங்கள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இவர் சிபிடிடி எனப்படும் மத்திய வரி வாரியத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடி, தம்மிடம் முக்கியமான வழக்கு ஒன்றைக் கிடப்பில் போட வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரமோத் சந்திர மோடி முக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.   அத்துடன் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பி.சி.மோடியால் மீண்டும் கொண்டு வரப்பட்டதாகவும்  அதனை ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தினார் என்றும் கடிதத்தில் அல்கா  குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி தாம் புகார் அளித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பி.சி.மோடிக்கு ஒரு வருட பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.