காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.  தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற அரசு இறுதிவரை போராடும். நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியுள்ளது. காவிரி நீர்ப் பங்கீடு சாதக, பாதகங்கள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டபிறகு உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது, மத்திய அரசு அளித்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது, இதனால் இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்த பின் விளக்கம் அளிப்போம்” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.