டில்லி: 

காவிரி தீர்ப்பை அமல்படுத்த  மூன்று மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் குறித்து விளக்கம் கோரிய மத்திய அரசு மனு, வரும் திங்கள் கிழமை  விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. தமிழக அரசின் மனுவுடன் மத்திய அரசின் மனுவை இணைத்து  விசாரிக்க  உச்சநீதிமன்றம் முடிவு செய்து உள்ளது.  மத்திய அரசின் மனுவை விசாரிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.