டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்து உள்ளது.

ஆளுங்கட்சியான அதிமுகவும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில்  தமிழகத்தில் போராட்டங்கள் மேலும் வலுவடைந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மாலை டில்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால், இன்று நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள  பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும், விவசாயிகள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிக  தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் திடீர்  ஆலோசனை நடத்திய நிலையில் நேற்று இரவு தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் இன்று காடில 11.30 மணி அளவில்  பிரதமரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் கவர்னர் பன்வாரிலால் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.