காவிரி பாசன பகுதிகள்: ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு!

Must read

டில்லி:
காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
cauvery
காவிரி பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள தண்ணீர் குறித்து ஆராய குழு அமைத்து கண்காணிக்கும்படி உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தையடுத்து, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீர்வள ஆணையத்தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையிலான இந்த குழு வரும் அக். 7ந்தேதி ஆய்வை தொடங்க உள்ளது.
இந்த குழுவில் ஜி.எஸ்.ஜா உடன்,  நீர்வள ஆணையத்தை சேர்ந்த மசூத் குசைன்,  கிருஷ்ணா, கோதாவரி பாசன அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே. குப்தாவும்  ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுடன்  தமிழக, கர்நாடக தலைமை செயலாளர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அத்துடன் தமிழகம் கர்நாடகம், கேரளா, புதுவையை சேர்ந்த தலைமை பொறியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
காவிரி உயர்மட்ட குழு  அ க்டோபர் 7ந் தேதி பெங்களூரில்  கூடி முதற்கட்ட ஆலோசனையை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடக தலைமை செயலர்கள் தமது பிரதிநிதிகளையும் ஆய்வுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article