சென்னை:

காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி வழக்கில் இன்றைய விசாரணையின்போது, 14 பக்கங்கள் கொண்ட வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் நகல் நான்கு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை 16ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசியல், தேர்தல் லாபத்துக்காக தமிழகத்தை வஞ்சித்தது மத்திய அரசு கர்நாடக தேர்தல் முடிந்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிகவே மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளையே அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். அனைத்து விவசாய அமைப்புகளையும் அழைக்க வேண்டும்.

முழு அதிகாரமிக்க வாரியமே வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு வாரியத்துக்கு மாற்றாக எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாது. திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். மே-16ல் தனது வாதங்களை திருத்தமாக எடுத்து வைக்க வேண்டும்.

ஆனால், கர்நாடக தேர்தல் தான் காரணம் என கூறாமல், மறைமுகமாக பல காரணங்களை கூறி இழுத்தடித்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று முன் தினம் முடிந்த நிலையில், உச்சநீதிமன்றம் கோரிய காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.

மத்திய நீர்வளத்துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், காவிரி பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், வாரியமோ ஆணையமோ குழுவோ அமைக்கப்படும். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமைக்கும் அமைப்பு நிறைவேற்றும்.

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலிருந்து ஒவ்வொரு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் அதில் இடம்பெறுவர். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இது இருக்கும் என வரைவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விசாரணையை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

இந்நிலையில், நாளையே உடனடியாக அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்றும்,,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாளை மறுநாள் நடைபெறும் விசாரணையின்போது அழுத்தமான வாதங்களை தமிழக அரசு முன்வைக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், நாளை அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்களை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதுபோல திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது,  காவிரி விவகாரம் தொடர்பாக உடனடியாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

மேலுரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும், அதை செய்ய தவறும் பட்சத்தில் அறிவுறுத்துவது உச்சநீதிமன்றத்தின் வேலை என்றும்,  காவிரி விவகாரத்தில் மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை,  இதே நிலை தொடர்ந்தால் உச்சநீதிமன்றம் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.