சென்னை:
ரும்பாக்கத்தில் பள்ளிச் சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய விவகாரத்தையடுத்து, தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் மாடு வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாடுகள் இரவு நேரம் மட்டு மின்றி பகல் நேரங்களில் அதன் உரிமையாளர்களால் திறந்து விடப்படுவதால், அவகைள், சாலையோரங்களில் மேய்ந்து வருவதுடன், சாலையின் நடுவே படுத்துக்கொண்டு போக்குவரத்தையும் சீர் குலைத்து வருகிறது. இதனால், சென்னை மாநகராட்சி மாடுகளை பிடித்துச்சென்று, அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகிறது. இருந்தாலும் நகரத்தின் உள்புறங்களில் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதும், அதனால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த இஸ்லாமிய சிறுமியை மாடு முட்டி வீசியது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுமி புர்கா அணிந்திருந்ததால், அதைக்கண்டு மிரண்ட மாடு, அந்த சிறுமியை முட்டி மோதியதாக கூறப்படடுகிறது.

சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை பாள்ளி முடிந்ததும் விட்டுக்கு அழைத்துக் கொண்டு ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தாய் மகள் இருவரும் புர்கா அணிந்திருந்தனர். தாய் கருப்பு நிற புர்க்காவும், மகள் ஊதா நிற புர்காவும் அணிந்திரு ந்தனர். அவர்களை கடந்து சென்ற இரு பசு மாடுகளில் ஒன்று, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று திரும்பி சிறுமி ஆயிஷாவை தன் கொம்புகளால் தூக்கி கீழே வீசி தரையில் போட்டு தொடர்ந்து தாக்கியது.

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பங்களா வாசிகள், அவர்களை காப்பாறற முன்வராமல், வேடிக்கை பார்த்தனர். அப்போது பகுதியில் வசித்து வந்த மேலும் சிலர் மாட்டை கல்லால் அடித்து துரத்த முற்பட்டனர், ஆனால், அதை கண்டுகொள்ளாத மாடு, அந்த சிறுமியை தொடர்ந்து தனது தலையால் முட்டி தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பலர் சேர்ந்து, மாட்டை அடித்து விரட்டினர். ஒருவர் தடியைக்கொண்டு மாட்டை அடித்து அங்கிருந்து அகற்றி சிறுமி ஆயிஷாவை காப்பாற்றினர்.

மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சேர்த்தனர், சிறுமிக்கு தலையில் நான்கு தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “மாட்டின் உரிமையாளர் மற்றும் மாட்டை பிடித்து பெரம்பூரில் உள்ள கால்நடை அலுவலகத்தில் வைத்துள்ளோம், சென்னை மாநகரத்தில் மாடுகளை வளர்ப்பது உகந்ததல்ல ஆனால் சட்ட விதிமுறைகளை பின்பற்றி மாடுகள் வளர்ப்பதில்லை. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், ஓட்டேரி கோயம்பேடு எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பகுதிகளில் சில மாட்டின் உரிமையாளர்கள் இது போன்ற மாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல் தெருவில் விட்டுவிடுகின்றனர்.இதனால் விபத்துக்கள் மற்றும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது.

சென்னை மாநகராட்சி இதற்கெல்லாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற்றால் மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்மேலும், நேற்று நடந்த சம்பவத்தை மாட்டின் உரிமையாளர் மீது ‘கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்’, ‘மற்றும் வீட்டில் வளர்க்கும் விலங்கினால் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்’ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.