மத்திய பிரதேச மாநிலம் சச்சார்பூர் என்ற இடத்தில் இருக்கும் ரேஷன் கடையை பொதுமக்கள் சூறையாடியதாக தெரிகிறது. ரூ.500 ,1000 நோட்டுக்களை செல்லாது என்று அரசு அறிவித்தபின்னர் தங்கள் கையில் பணம் இல்லாத காரணத்தால் மக்கள் தனது கடையை சூறையாடியதாக அந்த ரேஷன் கடையின் பொறுப்பாளர் முன்னி லால் என்பவர் தெரிவித்தார்.

mp_ration

ஆனால் இது குறித்து விசாரித்த போலீசார் சொல்லும் தகவல் சற்று வித்தியாசமாக உள்ளது. முன்னிலால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக ரேஷன் பொருட்களை சரிவர விநியோகம் செய்யவில்லை எனவும் நான்கு மாதம் தரவேண்டிய பொருட்களை மொத்தமாக தரும்படி மக்கள் கேட்க அதற்கு முன்னிலால் மறுத்ததால் அவர்கள் அக்கடையை சூறையாடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இந்த குறிப்பிட்ட ரேஷன் கடையில் இருந்து தங்களுக்கு சரிவர பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என்று மக்கள் ஏற்கனவே முதலமைச்சர் ஹெல்ப்லைனில் புகார் கொடுத்திருந்ததாகவும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் ஏற்கனவே கோபத்தில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.