கொலை மிரட்டல் புகார் – சசிகலா மீது வழக்குப்பதிவு

Must read

சென்னை:
னக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து அவர், சசிகலாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையடுத்து, சசிகலா தரப்பினர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, செல்போனில் தொடர்புகொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி திண்டிவனம் அடுத்த ரோஷனை காவல் நிலையத்தில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது, 6 பிரிவுகளின் கீழ் போலீசார், இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More articles

Latest article