ந்தூர்

னைவி பெண் குழந்தையைப் பெற்றதால் செல்போனிலேயே முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

இஸ்லாமியப் பெண்களிடம் கணவர் தலாக் என மும்முறை தெரிவித்தாலே இருவருடைய திருமணம் முறிந்து விவாகரத்து ஆகிவிடும்.   இதற்கு இஸ்லாமியப் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முத்தலாக் தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி கணவர் ஒரே நேரத்தில் தொடர்ந்து மும்முறை தலாக் கூறி விவாகரத்து  பெற முடியாத நிலை உள்ளது.

இந்தூர் அருகே உள்ள எம் ஐ ஜி பகுதியைச் சேர்ந்த ஆசிரியை அலினா கான் கடந்த 2009 ஆம் வருடம் ஆஸ் முகமது கான் என்பவரை மணமுடித்தார்.  கடந்த 2014 ஆம் வருடம் இவர்களுக்குப் பெண் குழந்தை  பிறந்தது.   அலினாவுக்கு ஆண் குழந்தை பிறக்காததால் அவரை கணவரும் கணவரின் சகோதரர்களும் ரூ.5 லட்சம் அபராத வரதட்சிணைக் கேட்டு அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.

இடையில் ஆஸ் முகமது போதை பழக்கம் ஏற்பட்டு மேலும் அலினாவை கொடுமை செய்துள்ளார்.   அலினா கர்ப்பம் அடைந்து இம்முறையும் பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதையொட்டி ஆண் குழந்தை பெறாமல் பெண் குழந்தையைப்  பெற்றதாக காரணம் கூறி அவரை செல்போனிலேயே மும்முறை தலாக் எனக் கூறி ஆஸ் முகமது விவாகரத்து செய்துள்ளார்.

அலினா இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  இந்த  புகாரின் அடிப்படையில் ஆஸ் முகமது மீது முத்தலாக் தடைச் சட்டம், வரதட்சணைக் கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.   விரைவில் ஆஸ் முகமது கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.