பிரகாஷ் ராஜ் மீது வழக்கு : வரும் 7 ஆம் தேதி விசாரணை

க்னோ

பிரதமர் மோடியையும், யோகி ஆதித்ய நாத்தையும் விமர்சித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த கவுரி லங்கேஷ் கொலை பற்றி பேசுகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், “இன்னும் கொலையாளி யார் என்பதே கண்டுபிடிக்கவில்லை.  மோடியும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் என்னை விட மிகச் சிறந்த நடிகர்கள்” எனக் கூறினார்.  அது மட்டுமின்றி அவர் தேசிய விருதுகளை திருப்பித் தரப்போவதாக பேசியதாகவும் செய்தி வெளியாகியது.  அது தவறு என பிரகாஷ்ராஜ் மறுப்புத் தெரிவித்தார்.

தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு வழக்கறிஞர் லக்னோ நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு தொடுத்துள்ளார்.  அவர் தனது வழக்கு மனுவில் “நடிகர் பிரகாஷ்ராஜ் தேவையற்ற விமர்சனங்களை பிரதமர் மீதும் உ பி முதல்வர் மீதும் செய்துள்ளார்.  அவர் மீது நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளர்.   இந்த வழக்கின் விசாரணை வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Case filed against prakash raj for criticising modi
-=-