சட்டசபை போட்டி கூட்டம்: வழக்கு பதிவு! ஸ்டாலின் கைதா…?

Must read

சென்னை:
கோட்டை தலைமை செயலக வளாகத்திற்குள் அனுமதியின்றி கூட்டம் போட்டதாக ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
staline
தமிழக சட்டசபையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட திமுக. உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தலைமைசெயலக வளாகத்திற்குள் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக திமுகவை சேர்ந்த மு.க.ஸ்டாடிலன் உள்டப  60 பேர் மீது சென்னை கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேதி தலைமை செயலக வளாகத்திற்குள் திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தினர். இது தொடர்பாக கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பாக, அனுமதியின்றி கூடுவது, ஏதோ ஒரு நோக்கத்துடன் செயல்படுவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ்,  18ந் தேதி சட்ட சபைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் மீதும்,
19ந் தேதி அனுமதியின்றி கூட்டம் கூடியதாக ஸ்டாலின் உட்பட 60 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு காரணமாக திமுகவினர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
இதற்கிடையில், நாளை சட்டசபை வளாகத்தில் திமுகவினர் ஏதேனும் கூட்டமோ, தர்ணாவோ செய்ய முயன்றால், அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நாளை காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் ஜெயலலிதா பதிலுரை ஆற்றும் வேளையில் எதிர்க்கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article