சென்னை: முப்படை தளபதி குறித்து டிவிட் பதிவிட்ட யுடியூபர் மாரிதாஸ் மீதுதமிழகஅரசு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்குச் சென்ற போது குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பிரபல யுடியூபர் மாரிதாஸ்,  ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், திமுக அரசு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் போட்டிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது தேசதுரோக வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் விசாரணை நடத்தில்  சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து மாரிதாஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் நடவடிக்கையை நீதிபதி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுபோன்ற கருத்து தெரிவித்த சுப்பிரமணியசாமியை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

மாரிதாஸ் மீது  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தது செல்லாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தாலும், நியூஸ்18 வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு இருப்பதால், அவரால் வெளியே வர முடியாத நிலை உருவாகி உள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…