மதுரை: தூத்துக்குடி விமானத்தில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட சோஃபியா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018lம் ஆண்டு,  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்த மாணவி லூயிஸ் சோபியா என்பவர், அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  முன்னிலையில், பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டார். அந்த காலக்கட்டத்தில், து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம்  நடைபெற்ற நிலையில், அந்த  சம்பவம் தனக்கு மிகுந்த வேதனை அளித்ததால், விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன் என சோபியா கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையல், பாஜக புகாரின்பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதை எதிர்த்து மாணவி லூயிஸ் சோபியா சார்பில் உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த   உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தனபால், வழக்கு முறையான பிரிவில் பதிவு செய்யப்படவில்லை என கூறி, சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.