உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை சுட்டிக்காட்டும் கார்டூன்!

Must read

பாஜகவுடன்  திமுக  ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்வதாக கூறிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறினார்.

“டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன்?. கை கட்டி வாய் பொத்தி உத்தரவு என்னனு கேக்கவா போறேன்?. கலைஞர் புள்ள நானு. உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வரியை மனதில் நிலை நிறுத்தி இருப்பவன் நான். ஆகவே தமிழக முதல்வர் என்ற முறையில் ஒன்றிய அரசிடம் பேசி தமிழகத்திற்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் தேவையான திட்டங்களை பெற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது ஆகவே ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறதே தவிர திமுகவிற்கு பாஜகவிற்கும் அல்ல.

திமுகவின் கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் ஏந்த உறவும் கிடையாது . ஆகவே சகோதரர் திருமா கிஞ்சித்தும் நீங்கள் கவலை படவேண்டாம்” என கூறியுள்ளார்.

More articles

Latest article