சென்னை:

சென்னை மியூசிக் அகாடயின் சங்கீத கலாநிதி மற்றும் இதர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பிரபல கர்நாடக இசைப் பாடகி சவும்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் கர்நாடக இசை வல்லுநர் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது சென்னை மியூசிக் அகாடமி. இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் எஸ்.சவும்யாவுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீத கலாநிதி எஸ். ராமநாதனிடமும் சங்கீத கலா ஆச்சார்யா டி. முக்தாவிடமும் இசை பயின்றவர். . சென்னை பல்கலைக்கழத்தில் இந்திய இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இது குறித்து மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிக்காலஜிஸ்ட், நிருத்ய கலாநிதி உள்ளிட்ட விருதுகளுக்கு, விருது பெறுபவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.சவும்யாவுக்கு வழங்கப்படு கிறது. எம்.எஸ்.ஷீலா மற்றும் சீதா நாராயணனுக்கு கலா ஆச்சார்யா விருது வழங்கப்படுகிறது.

நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமன் மற்றும் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதிக்கு டிடிகே விருது வழங்கப்படுகிறது.

மியூசிக்காலஜிஸ்ட் விருதுக்கு ஆர்த்தி என்.ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடனமாமணி பிரியதர்ஷினி கோவிந்த் நிருத்ய கலாநிதி விருது பெறுகிறார்.

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படும்.

நிருத்ய கலாநிதி நாட்டிய விருது பெறும் பிரியதர்ஷினி கோவிந்துக்கு ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் நாட்டிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சவும்யா, இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை நடை பெறவிருக்கும் சங்கீத அகாடமியின்  93-வது ஆண்டு மாநாட்டுக்கு தலைமை தாங்குவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.