மதுரை:
ம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நீதிமன்றம், அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை  தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  சென்னை உள்பட சில மாவட்டங்களில் பாதிப்பின் எண்ணிக்கை டபுள் டபுளாக அதிகரித்து வருகிறது. இதனால், பல இடங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், அதற்கு பள்ளிவாசலை திறக்க அனுமதிக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரையைச்  சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் காலை 9 மணிமுதல் 11 மணிவரை 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு வழக்கு தொடர்ந்தார். அதனை விவாதித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறினார்கள். மேலும், அந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வீட்டிலே ரம்ஜான் தொழுகை நடத்துமாறு முஸ்லீம் சங்க தலைவரான தலைமை காஜி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.