Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்புமனு பெறலாம்! திமுக தலைலவர் அறிவிப்பு

Sep 2, 2020
சென்னை: கட்சியின் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர்,  இன்று வேட்புமனு பெறலாம் என திமுக தலைலவர்  மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
”திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09-09-2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்” என்றும், அன்றைய தினம், கட்சியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தி.மு.கழக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில்,  திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று வேட்புமனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளோர்,  திமுக தலைமை அலுவலகத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி வேட்புமனு பெற்றுக்கொள்ளலாம்.
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நாளை (3ந்தேதி) கடைசி நாள். நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம்.

நாளை மறுநாள் (4ந்தேதி) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.

5ந்தேதி மதியம் 1 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.

5ந்தேதியன்று மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Post navigation

மெட்ராஸ் உயர்நீதி மன்ற வளாகத்தில் 7 மாடிகளைக் கொண்ட நிதிமன்ற வளாகம்… 4ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது தமிழகஅரசு…
செயற்கை உடல்உறுப்பு நிலையம் உருவாக்கிய கோவை அரசு மருத்துவமனைக்கு எடப்பாடி பாராட்டு!

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer