டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை செய்துள்ளது.
இதுதொடர்பாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆற்று வடிகால்கள், கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் அருகில் வசிக்கும் மக்கள் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பட்டுள்ளது. இதை தடுக்க நாடு முழுவதும் இதுவரை, 770 மாவட்ட NCD கிளினிக்குகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் 6,410 NCD கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) நடப்பாண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள், காவல்வாய்கள் அருகில் வாழும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்கான விவரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் மார்ச் 11, 2025 அன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிடப்பட்டது. தண்ணீரில் அதிக அளவு ஈயம், இரும்பு மற்றும் அலுமினியம் கண்டறியப்பட்டது, இ து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறுவதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மார்ச் 11 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். அதன் விவரங்கள் வருமாறு:-
நாட்டின் உயர் மருத்துவக் குழுவான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய ஆய்வில், நதி வடிகால்களுக்கு அருகில் வசிப்பவர்கள் புற்றுநோய்க்கான அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
நதிகள் மற்றும் திறந்த வடிகால்களில் உள்ள தீவிரமாக மாசுபட்ட நீர், நீண்ட காலமாக இதனால் மக்கள் பாதிக்கப்படுவது தெரிந்ததும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வேதியியல் கழிவுகள், கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் உடலில் தேங்கி, புற்றுநோயை உண்டாக்கும் என்பது தெரியவந்தது.
அதைப்போல, ஈயம் (Lead), இரும்பு (Iron), அலுமினியம் (Aluminium) போன்ற கனிமங்கள் மத்திய மாசுபாடு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அனுமதி அளித்ததை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது.
தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயன கழிவுகள், ஆற்றில் கலப்பதன் காரணமாக மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்ட ஆய்வில், நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள், கழிவுநீர் கால்வாய் பகுதிகளில் ஆபத்து அளவுகள் பாதுகாப்பான வரம்புகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இது கடுமையான உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கிறது.
ஆய்வில் இப்படியான அதிர்ச்சி அறிக்கை வெளிவந்த உடனே மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்தியஅரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் மாசுபாடு கட்டுப்படுத்த புதிய சட்டங்கள், தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுமே மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அத்துடன் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், முதற்கட்டமாக, நாடு முழுவதும் 19 மாநில புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்கள் (State Cancer Institutes – SCIs) மற்றும் 20 மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்கள் (Tertiary Care Cancer Centres – TCCCs) அமைக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, 22 புதிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (AIIMS) புற்றுநோய் சிகிச்சை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை, 770 மாவட்ட NCD கிளினிக்குகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் 6,410 NCD கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் ஆகியவை பராமரிப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, அனைத்து 22 புதிய AIIMS மருத்துவமனைகளிலும் மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் சேவைகளை வழங்கும் பிரத்யேக புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்த சேவைகளுக்கான சிகிச்சைகள் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது அதிக மானிய விலையிலோ வழங்கப்படும். அதனால், அதை மத்திய அரசின் சுகாதாரத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குவது மூலம் செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
மேலம், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்குகிறது.
அரசாங்க தரவுகளின்படி, இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த 55 கோடி மக்களுக்கு (12.37 கோடி குடும்பங்கள்) பயனளிக்கிறது.
சமீபத்தில், வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கிய வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 500க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கியதுஎன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை வழங்க 15,000க்கும் மேற்பட்ட ஜனௌஷதி மையங்கள் (மக்கள் மருந்தகங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 87 புற்றுநோய் தொடர்பான மருந்துகள் இந்த மருந்தகங்களில் கிடைக்கின்றன.
மலிவு விலை மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான நம்பகமான உள்வைப்புகள் (AMRIT) திட்டத்தின் கீழ், 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 222 AMRIT மருந்தகங்கள் 50% வரை தள்ளுபடியில் மருந்துகளை வழங்குகின்றன.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மக்கள் மருந்தம் (ஜனௌஷதி மையங்களில்ஸ்ர) சுமார் 87 புற்றுநோய் மருந்துகள் கிடைக்கின்றன என்று தெரிவித்துள்ளதுடன், ஆ
தேசிய தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் திட்டத்தின் (NP-NCD) கீழ் ஆரம்பகால நோயறிதல் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் புற்றுநோயைத் தடுப்பதிலும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும், மக்களுக்கு மத்திய அரசு சார்பில் இந்த அதிர்ச்சி அறிக்கையை குறிப்பிட்டு பாதுகாப்புகாக சில எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் நீர் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்க வேண்டாம் எனவும், தூய்மை இல்லாத குடிநீரை பயன்படுத்த வேண்டாம் எனவும், வீட்டிற்கு பக்கத்தில் தொழிற்சாலைகள் மற்றும் ஆற்றுகளில் வெளியேற்றப்படும் கழிவுகளை பார்த்தால் அதனை நீக்கம் செய்ய கோரிக்கை வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.