ராமர் கோவிலை மெக்கா அல்லது வாடிகனிலா கட்ட முடியும்? பாபா ராம்தேவ்

Must read

லக்னோ:

ராமர் கோவிலை  மெக்கா மதினா அல்லது வாடிகனிலா கட்ட முடியும் என்று பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தி ராம்ர் கோவில் கட்டப்பட உள்ள இடம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ராமர்கோவில் விவகாரத்தை இந்து அமைப்புகள் கையில் எடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,  ராமர்கோவில் விவகாரத்தை எழுப்பி, பாஜகவுக்கு பல இந்து அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே  ராமர் கோவில் விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை இழக்கும் என்று யோகா குருவான பாபா ராமதேவ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, ராமர் கோவில் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அங்கு அவருக்கு கோவில் கட்டப்படவில்லை என்றால், மெக்கா, மதினாவிலோ, வாடிகனிலா கட்ட முடியும் என்றும் எதிர் கேள்வி எழுப்பினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article