மைக்கேல் ஜே. மோரெல்,  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஐ.ஏ. எனப்படும்  அமெரிக்காவின்  மத்திய உளவுத்துறை யில் பணியாற்றியுள்ளார். கடந்த 2010 ஆண்டு முதல் 2013 வரை மத்திய உளவுத்துறை யின் இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.  டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் ஆகிய  இருவரும் களத்தில் உள்ளனர்.

மோரெல் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில்,  ஹிலாரியே நாட்டை வழிநடத்த உகந்த தலைவரென பாராட்டியுள்ளார். அவர் தனது    ஆதரவினை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரையாக வெளி யிட்டுள்ளார்.

அவரது கட்டுரையின் தமிழாக்கம்:

மத்திய உளவுத் துறையில் . எனது 33 ஆண்டுகால பணியில் 6 அதிபர்களைப் பார்த்துள்ளேன். மூன்று குடியரசுக் கட்சி அதிபர்கள் மற்றும் மூன்று ஜனநாயகக் கட்சி அதிபர்கள்.
செப்டம்பர் 11 தாக்குதல் போது, நான் அதிபர் புஷ்ஷுடன் இருந்தேன். ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது நான் அதிபர் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
நான் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கிடையாது. குடியரசுக் கட்சியின் உறுப்பினரும் கிடையாது. எனது 40 ஆண்டுகால தேர்தல் வாக்குப்பதிவில் இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்துள்ளேன்.

நவம்பர் 8ம் தேதி ஹிலாரிக்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன். அதுவரை, அவர் அமெரிக்காவின் 45வது அதிபராக என்னாலான பிரச்சாரத்தை மேற்கொள்வேன்.
என்னுடைய இரண்டு கருத்துகள் கொண்டே நான் இந்த முடிவினை எடுத்துள்ளேன்.
1. ஹிலாரி கிளின்டன் அதிபர் பதவிக்குத் தகுதியானவர். அவரால் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
2. டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதி இல்லாதவர். அவரால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் உள்ளது.
நான் நான்கு ஆண்டுகள் ஹிலாரியிடம் பணியாற்றி யுள்ளேன். அவர் தேசப்பாதுகாப்பினை எப்போதும் அலட்சியம் செய்ததில்லை. மிகவும் தெளிவாக, தேச நலனை முன்னிறுத்தி முடிவுகளை மேற்கொள்வார்.
நாங்கள் சிரிய உள்நாட்டு போரினை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அவரிடம்  ஆலோசித்தபோது, அவர் மிகவும் தீவிரமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றார். சிரியாவில் காலூன்றும் இஸ்லாமிய அரசு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ” என்றார்.
ஹிலாரி பாதுகாப்பு விசயத்தில் தமது கட்சிஅரசியலைப் புகுத்தியதில்லை.

மே,2011ல் , தேசிய மாதுகாப்பு குழு கூட்டத்தில் ஹிலாரி கிளின்டன் ஒபாமாவுடன் மோரல்.

ஒருமுறை, வெள்ளை மாளிகை விருந்துக்காக ஒசாமா பின் லேடனின் தேடுதல் வேட்டையைத் தள்ளிப்போட ஆலோசனை வழங்கப் பட்டபோது, விருந்தினை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
ஹிலாரி கிளின்டனுடன் ஒப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு குறித்து டிரம்ப்பிற்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை. முதன்மைப் பருவத்தில் அவர் வெளிப் படுத்தியுள்ள குணாதிசயங்கள் அவர் ஒரு மோசமான தளபதியாய் இருப்பார் என்பதையே பறைசாற்றுகின்றது.
டொனால்ட் டிரம்பிடம், பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சட்டத்தினை மதிக்காத போக்கு, உண்மைகளைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமின்மை. அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்க மறுப்பது. தான் தோன்றித் தனமாய் செயல்படுவது, சுயவிளம்பரம் தேடுவது எனப் பட்டியல் நீள்கின்றது (இங்கு மோடியின் நினைவு வந்தால், நாங்கள் பொறுப்பல்ல)

டிரம்ப் அதிபரானால் தான் பிரச்சனை என்றில்லை. ஏற்கனவே டிரம்பினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் ஒற்றுமைக்கும் சோதனை துவங்கிவிட்டது.
ரஷ்ய அதிபர் புடின் அதிபராவதற்கு முன்னர் உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றி இருந்தார். அப்போது அவருக்கு அடுத்தவரின் வீக்னெசை தெரிந்துக் கொண்டு அதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் தந்திரம் தெரியும். அதன்படி தான் டொலால்ட் டிரம்ப்பை ஆரம்பத்தில் பாராட்டுவது போல் பேசினார். அவர் எதிர்பார்த்தபடியே டிரம்ப் தற்போது செயல்படத் துவங்கியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினை” மிகச் சிறந்த தலைவர்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
புடின் தனது அரசியல் எதிரிகள், சிறையிலிருந்த பத்திரிக்கையாளர்கள் எனப் பலரை கொன்று குவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் இரண்டு அண்டை நாடுகள்மீது படையெடுத்துள்ளார். ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் கொள்கைகளைப் பின்பற்றாமல், ரஷ்ய அதிபர் புடினின் கொள்கைகளையே விரும்பிப் பின்பற்றுகின்றார். உதாரணமாய், “ரஷ்யாஅமெரிக்காவை வேவு பார்த்ததை ஆதரித்தார். ரஷ்யா பால்டிக் மாநிலத்தின் மீது போர் தொடுப்பதை ஆதரித்தார்.

எங்கள் உளவுத்துறையில் நாங்கள் “ரஷ்ய அதிபர் புடின் ஒரு ஏஜன்ட்டாக டொனால் டிரம்ப்பை நியமித்துள்ளார் ” என்று விமர்சனம் செய்வோம்.

“முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க மாட்டோம்” எனக் கூறியதன் மூலம் டொனால்ட் டிரம்ப் தேசத்தின் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்டார். இந்த அறிவிப்பு அமெரிக்காவின் அடிப்படைத் தத்துவங்களுக்கு முரணானது.
மேலும், “அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போரினை, “முஸ்லிம்களுக்கெதிரான போர்” என ஜிகாத் தீவிரவாதிகள் சுமத்திவரும் குற்றச் சாட்டை மெய்ப்பிப்பது போல் டிரம்ப் பேசிவருகின்றார்.
பல்வேறு முஸ்லிம் அமெரிக்கர்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தியாகம் செய்துள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம், தேசத்தின் பாதுகாப்பிற்காக முக்கியப் பங்காற்றியுள்ளார். சி.ஐ.ஏ.வின் தீவிரவாத எதிர்ப்பு மையத்தினை பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக வழிநடத்தி யவர் அவர். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது.

எனது உளவுத்துறை பயிற்சியில், என் உள்மனம் சொல்வதை தைரியமாகச் செய்வதற்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள். அதனைத் தான் தற்போது செய்கின்றேன். அமெரிக்க  தேசம், ஹிலாரியின் கரங்களில் பாதுகாப்பாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.

தொடர்புடையப் பதிவு : முஸ்லிம்களின் தியாகத்திற்கு  முன்னர் டிரம்ப் பூஜியம்

ஹிலாரி ஒரு சாத்தான்: டிரம்ப் சாடல்

அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி: ஒபாமா புகழாரம்

இந்தியர்களிடம் இருந்து வேலைவாய்ப்பு பறிக்கப்படும்: டிரம்ப் ஆவேசம்