ஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் அமெரிக்க சிப்பாயின் தந்தை வியாழக்கிழமை ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடினார்.
பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் வெல்ஸ் பார்கோ மையத்தில் ” ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு-2016″ நடைபெற்றது.

us-vote-democrats-convention_9adda962-5539-11e6-9aeb-9df9517d5433
9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குக்கு பிறகு அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து 14 அமெரிக்க முஸ்லிம்கள் இறந்துள்ளனர். அதில் ஒருவர் கேப்டன் ஹுமாயூன் கான். ஹுமாயூன் கான் இராக்கில் உள்ள “பாக்குபா” கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் இறந்த அமெரிக்கர்.

கடந்த வியாழக்கிழமையன்று, ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டின் கடைசி நாளில் பேசிய ஹுமாயூன் கானின் தந்தை கிஸ் கான் தன் மகனின் தியாகத்தை நினைவு கூர்ந்ததுடன்,  டொனால்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடி அவருக்கு அரசியல் பாடமெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முஸ்லிம்கள்மீது துவேசக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றார். “முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடைசெய்வேன்” என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

ஈராக்கில் இறந்த தன் மகன் கேப்டன் ஹுமாயூனுக்கு ” ஒரு வீடியோ அஞ்சலி” திரையிடப்பட்டதை பார்த்த சிறப்பு விருந்தினர்களிடையே உரையாற்றினார்  கிஸ் கான்.  

தனது மனைவியுடன் மேடையேறிய அவர் தனது பேச்சை துவங்கியபோது, “இன்று நாங்கள் உங்கள்முன் மேடையில் நிற்பதை பெருமையாகக் கருதுகின்றோம். கேப்டன் ஹுமாயூன் கானின் பெற்றோர்கள் என்பதிலும் விசுவாசமும் நாட்டுப்பற்றுமிக்க அமெரிக்க முஸ்லிம்கள் என்பதில் கர்வமடைகின்றோம்.

டிரம்ப்
டிரம்ப்

 “நீங்கள் நாட்டிற்காக எந்தத் தியாகமும் செய்தது இல்லை. தன் உயிர் ஈந்த முஸ்லிம் மக்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதை நிறுத்துங்கள். முஸ்லிம்களின் தேசப்பற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்” என்று பேசி முஸ்லிம்கள்  அமெரிக்கா நுழைவதை தடை செய்யும் டிரம்ப்பின் திட்டத்தைக் கடிந்து கொண்டார்.

“டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி வருகின்றார். அவர் ஜனாதிபதி ஆனால் நாங்கள் அமெரிக்காவில் குடியிருப்பதே கேள்விக் குறியாகிவிடும்.” என்றார்.
“டொனால்டு டிரம்ப், அவர்களே, உங்களை நம்பி அமெரிக்காவின் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கர்களிடம் கேட்கிறீர்களே… இதுவரை ஒது முறையாவது அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்த்தை படித்திருக்கின்றீர்களா ? என்று ஒரு அரசியலமைப்பு பிரதியைப் பார்வையாளர்களிடம் நீட்டியபோது, அரங்கமே கரவொலியை எழுப்பி அவரை உற்சாகப்படுத்தியது.

democratic-national-convention-day-four_80d5c82e-5539-11e6-9aeb-9df9517d5433
இதுவரை படித்ததில்லை என்றால்  உங்களுக்கு என்னுடைய புத்தகத்தை தருகின்றேன் !தயவுசெய்து அதில் ” சுதந்திரம் எனும் வார்த்தையைத் தேடிப் படியுங்கள்.
குறிப்பாக 14 வது திருத்தத்தைச் சத்தமாக வாசித்துப் பாருங்கள். ” சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவருக்கும் சமமான பாதுகாப்பு உத்தரவாதம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது” என்று டொனால்ட் டிரம்ப்க்கு அரசியல் வகுப்பெடுத்தார்.

மேலும், “டிரம்ப் அவர்களே ! நீங்கள் ஒருமுறையேனும் ஆர்லிங்டன் கல்லறைக்குச்  சென்றுள்ளீர்களா ? தயவு செய்து ஒருமுறை சென்று பாருங்கள்.

ஆர்லிங்டன் கல்லறைத் தோட்டம் , விர்ஜினியா (  வீரமரணம் அடையும்  தேசிய ராணுவ வீரர்கள் நல்லடக்கம் செய்யப்படும் இடம் )

அமெரிக்காவை பாதுகாப்பதற்காகத் தன்னுயிர் ஈந்த துணிச்சலான நாட்டுபற்றுமிக்க மக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். அதில் ஆண் பெண் என இரு பாலர், பல்வேறு மதத்தினர் மற்றும் பல பண்பாடு மக்களின் தியாகத்தைத் தெரிந்துக் கொள்வீர்கள். அவர்களின் தியாகத்தின் முன்னர் நீங்கள் ஒன்றுமில்லை ! ஒன்றுமே இல்லை! நீங்கள் எந்த ஒரு தியாகமும் செய்யவில்லை” என்றார்.
அவரது பேச்சைக் கேட்ட பார்வையாளர்களின் கண்ணீரில் மூழ்கினர். அவரை வெகுவாகப் பாரட்டினர்.  அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

டொனால் டிரம்ப்
முஸ்லிம் மற்றும் இந்தியர்களுக்கு எதிராக  நஞ்சை கக்கிவரும்  டொனால் டிரம்ப்