டில்லி,

யாருக்கு வாக்களித்தோம் என்று அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் வாங்க தேர்தல் கமிஷன் நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

தேர்தல் கமிஷனின் கோரிக்கையை ஏற்று நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே கட்சிக்கே வாக்கு பதிகிறது என்ற குற்றச்சாட்டை போக்கும் வகையில், வாக்களித்ததற்கான ஒப்புகைச்சீடு வழங்கும் விவிபிஏறி (VVPAT) இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கக்கோரி மத்தியஅரசுக்கு தேர்தல் கமிஷன்  கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து விரைந்து முடிவு எடுக்கும்படி தேர்தல் கமிஷனர் நைஜீம் ஜைதி சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துக்கு தனி கடிதமும் எழுதியிருந்தார்.

அதில், 2019ம் ஆண்டு நடைபெற இருக்கிற பாராளுமன்ற பொது தேர்தலில் உபயோகப்படும் வகையில், 2018ம் ஆண்டு செப்டம்பருக்குள்  இந்த இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே, தாமதப்படுத்தாமல் அந்த இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.

இதன் மூலம் வாக்காளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை ஏற்படும் அதற்காக ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அவசியம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.