வாஷிங்டன்

குடியுரிமை சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்பை மீறுவதாக மனித உரிமை  அமைப்பான அம்னெஸ்டி  இண்டர்நேஷனல்  தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமலாக்கியது.  இந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 2014 ஆம் வருடம் டிசம்பர் 31க்கு முன்பு குடியேறிய இஸ்லாமியர் அல்லாத அனைவருக்கும் குடியுரிமை வழங்கபட உள்ளது.  இதற்கு இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தின் மூலம் எந்த ஒரு மதித்தவரின் குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டது என இந்திய அரசு தொடர்ந்து உறுதி அளித்து வருகிறது.   அத்துடன் இந்த சட்டம் இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து மதம் சார்பான கொடுமைகளை அனுபவித்ததால் இந்தியாவுக்குத் தப்பி வந்த சிறுபான்மையினருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஆசிய பசிபிக் பகுதியின் மேலாளர் பிரான்சிஸ்கோ சர்வதேச மனித உரிமை  மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பின்படி அனைத்து மதங்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும்

ஆனால் தற்போது இந்தியா அறிவித்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி  ஒரு மதத்தினரை மட்டும் ஒதுக்குவது இந்திய அரசியலமைப்பை மீறுவதாகும்.  இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.   ஆயினும் மதச் சம்பந்தமாகப் பாரபட்சம் காட்டுவதால் இந்த கருத்தை வெளியிடுகிறோம்: எனத் தெரிவித்துள்ளார்.

.