டில்லி:

3 லோக்சபா தொகுதி தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 11ந்தேதி 3 தொகுதிகளுக்கான தேர்தல்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் 2 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தின் 1 தொகுதியில் வரும் மார்ச் 11ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் அன்று நடைபெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,  பீகாரில் உள்ள கோரக்பூர், புல்பூர் ( Gorakhpur and Phulpur) லோக் சபா தொகுதிகள் மற்றும், பீகாரின் அராரியா ( Araria ) தொகுதிக்கும் மார்ச் 11ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அதேநாளில், பாபுயா, ஜெகனாபாத் (Bhabua and Jehanabad) சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 20ந்தேதி என்றும், 21ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும்,வேட்புமனு திரும்ப பெற  23ந்தேதி  கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் மார்ச் 11ந்தேதி நடைபெறும் என்றும்,  ஓட்டு எண்ணிக்கை மார்ச் 14ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.