சென்னை:
ஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக-வும், அதிமுக-வும் தீவிரமாக தங்களின் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன.  இதில் அதில் அதிமுக, வேட்பாளர்களையே அறிவித்து விட்டது. திமுக, வேட்பாளர் நேர்காணலை 22ஆம் தேதி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
a
பாமக, பாஜக ஆகிய கட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. தமாகா போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியின் முடிவு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.  அக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் “மக்கள் நலக் கூட்டணி சார்பாக இந்த தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம்.  அதே நேரம்,  எங்கள் ஆதரவு யாருக்கு என்பது  குறித்து சில நாட்களில் அறிவிக்கப்போம்” என்று தெரிவித்தார்.
இதே கருத்தை, சி.பி.ஐ. கட்சியின் முத்தரசனும் கூறினார்.
ஆனால் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வேறுவிதமாக தெரிவித்துள்ளார்.
அதாவது, “இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் ஆலோசனை செய்து,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவோம்” என்று கூறினார்.
‘மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது’ என்று திருமாவளவன் உறுதியாக அறிவித்து அதை சி.பி.ஐ. கட்சியும் ஆமோதித்துள்ள நிலையில், ‘போட்டியிடுவோமா, இல்லையா என்பதை நான்கு கட்சிகளும் பேசி முடிவெடுப்போம்’ என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, இதுவரை இடைத்தேர்தல் பற்றி கருத்து எதனையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.