சென்னை,
மிழ்நாட்டில்  தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்  மற்றும் புதுவையின் நெல்லித்தோப்பு உள்பட 4 தொகுதிகளில் வாக்குபதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதி களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி 5 மணி வரை நடைபெற்றது.
தஞ்சையில் 69.07 சதவீத ஓட்டுகளும், அரவக்குறிச்சியில் 82.13 சதவீத ஓட்டுகளும், திருப்பரங்குன்றத்தில் 70.40 சதவீத ஓட்டுகளும், நெல்லித்தோப்பில் 86 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளது.
tanjore
தேர்தல் நடைபெற்ற தமிழகத்தின் 3 தொகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக வாக்குப்பதிவு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மொத்தம் 812 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் வீடியோ  காமிரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 26 வாக்குச்சாவடியில் 31,336 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.
இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
தஞ்சை தொகுதி ஓட்டுகள் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியிலும்,  அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுகள் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.  திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் மதுரை  மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் நடைபெறுகிறது.
வரும் 22ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அன்று பகல் 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.