சென்னை:

மிழக அரசு நேற்று திடீன பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல  பேருந்தில்றி ஏய பயணிகள், கட்டண உயர்வு தெரியாமல் பேருந்து நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு நேற்று திடீரென பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது.  தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான்  கட்டண உயர்வு அளித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பேருந்தில் பயணம் செய்த சாமானிய மக்களுக்கு கட்டண உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் அதிகாலை கோயம்பேடு செல்லும் பேருந்துகளில் ஏறிய அடித்தட்டு மக்கள், வியாபாரிகள் இந்த கட்டண உயர்வு குறித்து அறியாமல் நடத்துனரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

அதிக பணம் தர முடியாது என்று கூறினர். இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் நடத்துனர்களும் விழிபிதுங்கி நின்றனர்.

பேருந்து கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ஒரு நாட்கள் கழித்து அமல் படுத்தி யிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.

தற்போது சென்னையில் உள்ள பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதிக பட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல ஏசி பஸ்கில்,  குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் என்பது இன்றிலிருந்து  ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் அதிரடியாக  உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஏசி பஸ்களில் செல்லும் பயணிகள் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும்  விலை உயர்வைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காய்கறி விற்பனை செய்யும் மூதாட்டி ஒருவர் கூறும்போது, எப்போதும்போல இன்று காலை கோயம்பேடுக்கு பஸ் ஏறினேன்…  எப்போதும் 12 ரூபாய் டிக்கெட் வாங்குவேன்…  ஆனால்  இன்று 20 ரூபாய் கண்டக்டர் கேட்டார். நான் ஏன் என்று கேட்டால் டிக்கெட் விலை கூடிச்சி என்கிறார்… ஒரு ராவையிலையாப்பா விலையை கூட்டிங்க… அநியாயமே இருக்கேப்பா…. என்றார்.

பெரும்பாலான பஸ்களில் நடத்துனர்களிடம் வாக்குவாதமே நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.