கருத்துக் கணிப்புகள் பொய்யா? – மாயாவதிக்கு வாழ்த்துச் சொல்லும் அதிகாரிகள்

Must read

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல மூத்த உயர் அதிகாரிகள், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களுள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணியில் இருப்பவர்கள் ஆகிய இரு தரப்பாருமே அடக்கம்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வெளியானவற்றில், உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதாவே பெரிய வெற்றியை பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தும், இந்த அதிகாரிகள் மாயாவதியை சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

பொதுவாக, அரசின் மூத்த மற்றும் உயர்நிலை அதிகாரிகள், கள நிலவரம் என்ன என்பதை உண்மையாகவே அறிந்து வைத்திருப்பவர்கள். அவர்கள், கருத்துக்கணிப்புகள் நடத்தவதில்லை என்ற போதிலும், களத்தின் நிலவரத்தை தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள்.

இந்த அதிகாரிகள் மயாவாதி முதல்வராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமானவர்களாய் இருந்தவர்கள் என்று கூறப்பட்டாலும், கருத்துக் கணிப்புகளுக்கு முரணாய் மாயாவதியை சந்தித்து வாழ்த்துச் சொல்வதானது, பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

More articles

Latest article