காந்திநகர்,

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் இந்திய பிரதமர் மோடியும், ஜப்பன் பிரதமர் ஷின்சோ அபேயும்  கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

குஜராத்தில் உள்ள சபர்மதி ரெயில் நிலையம் அருகே  அகமதாபாத்-மும்பை இடையேயான அதிவேக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பங்குபெறுவதற்காக நேற்றே ஜப்பன் பிரதமர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அவரை பிரதமர் மோடி   மற்றும் மந்திரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு திறந்த காரில் சாலை மார்க்கமாக அழைத்து சென்றனர். அபே ஆசிரமத்தை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று இரு நாட்டு பிரதமர்களும் கலந்துகொண்ட அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் உள்கட்டமைப்புத் திட்டத்துக்கான கடன் இவ்வளவு சாதகமான நிலையில் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. அதாவது ஏற்கெனவே இருக்கும் நிதிநிலவரங்களுக்குத் தொந்தரவு அளிக்காமல் 81% தொகை கடனாக அளிக்க ஜப்பான் மனமுவந்துள்ளதை குஜராத் அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

புல்லட் ரெயில் திட்டம் குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்த ரெயில் திட்டம் வரும் 2022ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும், ஏற்கனவே இதற்கான காலவரம்பு 2023 என்று குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது ஓராண்டு முன்னதாகவே நிறைவேற்றப்படும் என்று கூறி உள்ளது.

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரெயில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள்  வழியாகச் செல்லும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக  மகாராஷ்டிராவில் 155.64 கிமீ தொலைவும், குஜராத்தில் 350,53 கிமீ தொலைவிலான  இரட்டை இரட்டை வழித்தடமாக அமையும் என்றும் கூறி உள்ளது.

இந்த திட்டத்தில் 21 கிமீ துரகம் சுரங்கப்பாதையாக இருக்கும், மகாராஷ்டிராவில் மும்பை தானே பகுதியில் 7 கிமீ கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.