தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் “ நமது கலாசாரத்துக்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

 

இதற்கு பதிலாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

 

’’பீட்டா அமைப்பு, சட்டத்தை உருவாக்கும் அமைப்பு அல்ல, சட்டத்துக்கு கட்டுப்பட்ட அமைப்பாகும்.  இத்தகைய, விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மீது குறி வைப்பது மலிவானது.

 

காளைகளை துன்புறுத்துவதை தடை செய்த மத்திய அரசின் சட்டங்களில் எங்களின் தலையீடு எதுவும் கிடையாது. விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயமானது என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

 

ஆகவே விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. இந்திய  அரசியல் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.