டில்லி:

க்களவையில் முதன்முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட நிதி அமைச்சசர் நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட் உரையின்போது, விரி விதிப்பு தொடர்பாக  பிசிராந்தையாரின் புறநாநூறு பாடலை தமிழில் வாசித்து, அதற்கு விளக்கம் அளித்து பேசினார். இதை தமிழக எம்.பி.க்கள் பெரிதும் வரவேற்றனர்.

பட்ஜெட் தாக்கலின்போது, வரிவிதிப்பு தொடர்பான தகவல்களை வாசித்த நிர்மலா சீத்தாராமன், அரசை நடத்த தேவையானதை மட்டுமே மக்களிடம் வசூலிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

வரி செலுத்தும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியர், வரி செலுத்து பவர்களின் பங்களிப்பால் தான் நாடு வளர்ச்சி அடைகிறது எனக் கூறிப்பட்ட அவர், வரிவிதிப்பு தொடர்பான புறநானூற்றுப் பாடலை பாடினார்.

‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின், அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே’ என்ற இந்த புறநானூற்றுப் பாடலை பாடினார்.

யானையின் பசிக்கு சிறிய அளவு நிலத்தில் இருந்து அறுவடை செய்த அரசியே போதுமானது. யானையை நிலத்திற்குள் அனுமதித்தால் அது நிலத்தில் உள்ள மொத்த பயிரையும் பாழாக்கி விடும் என்பது இதன் அர்த்தமாகும்.

அதிக வரிவசூல் செய்ய பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு உணர்த்த பிசிராந்தையார் இந்த பாடலை பாடி மன்னனின் தவறை உணரச் செய்தார்.

பட்ஜெட்டில் புறநானூறு பாண்டியன் அறிவுடை நம்பி, தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களி டம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை.  அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர்.

அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.

”காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, 
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல, 
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.”

என்ற பாடலை நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்தார்.

(பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார்)

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், சிறிய நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும். என்று அவர் விளக்கம் அளித்தார்.

நிர்மலா சீத்தாராமன் தமிழில் அழகாக புறநாநூற்று பாடலை பாடி, அதற்கு விளக்கம் அளித்தது, அவையில் இருந்த தமிழக எம்.பி.க்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.