டில்லி:

த்தியஅரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 20 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும்.

மேலும், புத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும்,  ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்  என்றும்,
ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது  என்று நிதி அமைச்சர் ; நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.