டில்லி,

ன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. காலை 11 மணி அளவில் 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், இன்றுமுதல் தொடங்கி உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டும், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், முத்தலாக் மசோ போன்ற பல்வேறு பிரச்சினைகள்  குறித்தும் ஆலோசனை நடைற்றது.

இன்றைய கூட்டத்தில், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.