புத்தபிட்சுகள் எதிர்ப்பு எதிரொலி: ரணில் அமைச்சரவையில் இருந்து 9 இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜினாமா

Must read

கொழும்பு:

ஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இலங்கையில் வாழும் புத்த பிட்சுகள், இலங்கை அரசில் உள்ள அமைச்சர்கள், கவர்னர்கள் பதவி விலக வேண்டும் என்று நெருக்கு தல்கள் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 கவர்னர்கள் பதவி விலக நிலையில், தற்போது ரணில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 9 அமைச்சசர்களும் பதவி விலகி உள்ளனர்.

இலங்கையில் கடநத ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில்  350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பில் இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்குள்ள சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இலங்கையில் வாழும் புத்த பிட்சுகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.  அமைச்சரவை, கவர்னர் போன்ற முக்கியமான பதவிகளில் இஸ்லாமியர்கள் பங்குபெறக்கூடாது என்று இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வந்தனர். இது தொடர்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் மிரட்டினர்.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் இருந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் கேபினட் அமைச்சர்கள்.  இதேபோல் ஆசாத் அலி, ஹிஸ்புல்லா ஆகிய இரண்டு ஆளுநர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு தவறியதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர் . இஸ்லாமிய உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article