லக்னோ:

ந்திரா, தெலுங்கானாவில், பகுஜன் சமாஜ் கட்சியும், ஜனசேனா கட்சியும் இணைந்து பாராளு மன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என பிஎஸ்பி தலைவர் மாயாவதி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுக்குடன்  சட்டமன்ற தேர்தலும் இணைந்து நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பிஎஸ்பி இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சிரஞ்சிவீயின் சகோதரரான, தற்போதைய ஆந்திர சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் . இவர்  ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி உள்ளார். தனது கட்சி சார்பில் நடைபெற உள்ள  தேர்தலில் போட்டியிட முடிவு செய்து  உள்ளார்.

முன்னதாக  தேர்தலில் போட்டியிடுவது குறித்து குழப்பத்தில் இருந்தவர், சமீபத்தில்,  லக்னோ சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசினார். அப்போது இரு கட்சி தலை வர்களிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதாவும், பவன் கல்யாண் கட்சிக்கு பிஎஸ்பி ஆதரவு தர முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. .

அதைத்தொடர்ந்து ஆந்திரா  தெலுங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

இரு கட்சியினரும் கூட்டணி சேர முடிவெடுத்துள்ள நிலையில்,  ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, சில தொகுதிகளை பவனின் கட்சிக்கு விட்டுத்தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  ஜனசேனா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் பவன் கல்யாண் மற்றும் பொதுச் செயலாளர் தோடா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பவன் கல்யாண் வெளியிட்டார். அதில், ஆந்திராவில், 4 நாடாளு மன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், 32 சட்டப்பேரவை தேர்தலுக்கான  வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே உள்ள கூட்டணியை உறுதிப்படுத்துவதாக,  இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்ககொள்ளும் என்றும், தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் பிஎஸ்பி தலைவர் மாயாவதி  அறிவித்து உள்ளார்.