சென்னை:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இன்று மாறன் சகோதரர்கள் கோர்ட்டில் ஆஜரானர்கள்.

தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரரின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பயன்படுத்தியதாக  குற்றம்சாட்டப் பட்டது.

இதையடுத்து, 2013 ஆம் ஆண்டில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் மற்றும் தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், அவரது சகோதரர் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராக இன்று மாறன் சகோதரர்கள், சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள்.