பெங்களூரு:

த்தியஅரசு நிறுவனமான ஹால் (HAL – Hindustan Aeronautics Limited – Aerospace company) பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில்  1,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கடந்த 4 வருடங்களில் ரூ.7334 கோடி லாபம் ஈட்டி இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது  ஊரியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை என்ற கூறி ரூ.1000 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

சமீப காலமாக   பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான புகாரில்  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் ஹால் நிறுவனம் பெயர் அடிபடுவது அனைவரும் அறிந்த விஷயம்.

மத்தியஅரசு நிறுவனமான இதில், இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனம் மூலமே ரஃபேல் ரக விமானங் களை தயாரிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மோடி அரசு, அதை மாற்றி அனில் அம்பானி நிறுவனத்துக்கு கொடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வகையில் ரூ.1000 கோடி கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரஃபேல் சர்ச்சையை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஹால் நிறுவனத்தில் கொள்முதல் செய்தவர்களிடம் இருந்து  வரவேண்டிய பணம் வராததால் பணியாளர்களுக்கு HAL – Hindustan Aeசம்பளம் வழங்க ரூ.1000 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள ஹால் நிறுவன எம்எடி ஆர்.மாதவன், (HAL CMD R Madhavan),  பற்றாக் குறையின் பிரதான காரணம் என்னவென்றால், HAL இன் மிகப்பெரிய வாடிக்கையாளர், இந்திய விமானப்படை (IAF), அதன் கட்டணத்தை செலுத்தவில்லை. 2017 செப்டம்பர் முதல் ஐஏஎஃப் ரூபாய் 2,000 கோடி மட்டுமே செலுத்தியுள்ளது. அதன் தற்போதைய கட்டணம் 14,500 கோடி ரூபாய்.

அதுபோல கடந்த ஆண்டு  டிசம்பர் 31, 2018 வரை, ஆயுதப்படைகளிடம் இருந்து மொத்தக் கட்டணம் ரூ 15,700 கோடி வரவவேண்டியது உள்ளது. இது மார்ச் மாதத்திற்குள்  20,000 கோடி ரூபாயை எட்டும். இது ஏற்கனவே ஹால் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள தயாரிப்புகளுக்கானது என்றும் தெரிவித்துள்ளர்.

எங்கள் கையில் உள்ள பணம் எதிர்மறையாகஇருப்பதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது மார்ச் 31 வரை  தேவையான ரூ.1000 கோடி ஓவர் டிராப்டாக கேட்டுள்ளதாகவும், இது பணியாளர் களின் 3 மாத ஊதியத்துக்கு தேவையானது என்றும் கூறி உள்ளார்.  இந்த கடன்  திட்டத்தை வாங்குவதற்கு அல்ல, தினசரி வேலைக்காகவே என்றுவர்,  தற்போதுள்ள 1,950 கோடி ரூபாயி லிருந்து எடுக்கப்பட்ட ஓவர் டிராஃப்ட் வரம்புக்குள் ஹால் தனது பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஹால் நிறுவனத்தில் 29,000 ஊழியர்கள் பணியாற்றி வருவதால், அவர்களின்  மூன்று மாதங்க ளுக்கு பணம் செலுத்துவதற்கு ரூ.1000 கோடி போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.