லண்டன்: பிரிட்டனில் சைக்ளிங் பயிற்சியை ஊக்குவிக்கும் திட்டத்தை துவக்கி வைத்த அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இந்தியாவின் லூதியானா நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ் உற்பத்தி செய்த ஒரு புரோ-பைக்கில் பயணம் மேற்கொண்டார்.
தற்போது 56 வயதாகும் ஜான்சன், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர். மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தை கடுப்படுத்தும் வகையில், பிரிட்டிஷ் குடிமக்கள் உடல் பருமனிலிருந்து மீள்வதை உற்சாகப்படுத்தும் வகையில், 2 பில்லியன் யூரோ மதிப்பிலான(ரூ.19392 கோடிகள்) சைக்ளிங் மற்றும் நடைபயண டிரைவ் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அந்த நிகழ்வில்தான், அவர் இந்திய நிறுவனம் தயாரித்த புரோ-பைக்கில் ரைடிங் செய்தார்.
தற்போதைய திட்டத்தின் அடிப்படையில், பிரிட்டனில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் பாதுகாக்கப்பட்ட பைக் பாதைகள் அமைத்தல் மற்றும் ஒவ்வொருவருக்குமான சைக்கிள் பயிற்சி மற்றும் பரிந்துரைகளின்படி, தேவையான பைக்குகள் கிடைப்பதை உறுதிசெய்வது உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைத்தார் போரிஸ் ஜான்ஸன்.