சென்னை: ஆண்டுதோறும் கோடை காலங்களில் சர்வதேச சுற்றுலா செல்லும் இந்தியப் பயணிகளில் பெரும்பாலானோரை, இந்த ஆண்டு ஈர்த்துள்ள நாடாக திகழ்கிறது பிரிட்டன்.

அங்கே, கோடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதே இதற்கு காரணம்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கோடை காலத்தில், குளிரான இடங்களுக்கு உலக சுற்றுலா செல்வது பலரின் வழக்கமாக இருக்கிறது. தற்போது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால், உலக சுற்றுலா செல்லும் பல இந்தியர்களின் கவனம் பிரிட்டனை நோக்கி திரும்பியுள்ளது.

பயணத்திற்கான முன்பதிவு 250% அதிகரித்துள்ளதாக டிராவல் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. பலரும், வங்கிகளில் சுற்றுலா கடனுக்காக விண்ணப்பித்து வருகிறார்கள்.

சுற்றுலாவோடு சேர்ந்து, கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பது, ஒரு பெருமைக்குரிய மற்றும் அந்தஸ்துக்குரிய விஷயமாகவும் இருப்பதால், பிரிட்டனை நோக்கி திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி