தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 2 (பெரியது)

சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது)

உப்பு – தேவையானவை

பச்சை மிளகாய் – 3

பெருங்காயத்தூள் – சிறிது

புளி – நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

முதலில்  கத்திரிக்காய் எடுத்து சுத்தம் செய்து முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில்  வத்து திருப்பி விட்டு சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை  அகற்றிவிடவேண்டும்.

 

மிக்ஸியில் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவையை நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு தோல் நீக்கிய கத்திரிக்காயை அரைத்த விழுதுடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

 

சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி இப்போது தயார். இந்த சட்னியை இட்லி, தோசையுடன் தொட்டு கொள்ள அருமையான  ஜோடி.!