சென்னை: சிறுவன் குண்டு பாய்ந்த சம்பவத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டு விட்டது என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்குபாதுகாப்பு படையிdர் மட்டுமின்றி, காவல்துறையினருக்கும்  துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அன்று நடைபெற்ற பயிற்சியின்போது,  பயிற்சி மையத்தில் இருந்து பறந்து சென்ற ஒரு குண்டு,   சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள  வீட்டில் இருந்த சிறுவன்ஒ  தலையில் பாய்ந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து,  குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுவன் புகழேந்தி உள்ளார்.

இதனிடையே, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததைக் கண்டித்தும், நீதி கேட்டும் சிறுவனின் உறவினர்கள் புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மா சத்திரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக தமிழக அரசு மூட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில்,  நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடக்கோரி புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. இன்றைய விசாரணையின்போது,   தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,  விபத்தைத் தொடர்ந்து, “கடந்த டிசம்பர் 30ம் தேதியே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது.” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது உத்தரவிட்டது.