பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி!

Must read

ம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் செய்த அட்டகாசத்துக்கு பதிலடியாக இன்று இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கும் அதே நேரத்தில் பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
pakeran
பாகிஸ்தான் ஈரானுடன் 900 கி.மீ தொலைவிலான எல்லைப்பகுதியை பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்தப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி இன்று  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஈரான் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது.
வீசப்பட்ட குண்டுகள் எல்லையோர கிராமம் ஒன்றில் விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
நல்லவேளையாக தாக்குதலில் உயிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் படையினரும் திருப்பி தாக்கியதாக தெரிகிறது.

More articles

Latest article