சென்னை: தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும்,  பூத் சிலிப் கிடைக்காதவர்கள், Voter Helpline என்ற மொபைல் செயலியில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18வது நாடாளுமன்றம் அமைப்பதற்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.  அதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாளையுடன் தேர்தல்பிரசாரம் ஒய்வு பெறுகிறது.

இந்த நிலையில், வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில், பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்ரல் 1ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில்,  பூத் சிலிப் வழங்கும் பணி 92.80% நிறைவடைந்துள்ளது என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். அதாவத,  வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து வாக்காளர்களுக்கும், ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளது என கூறியவர், பூத் சிலிப்பில்,  வாக்காளர் பெயர், வயது, முகவரி, அவர் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியலில் வரிசை எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஓட்டுச்சாவடி: இவற்றை ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லும்போது, அதில் உள்ள வரிசை எண்ணை வைத்து, அங்குள்ளவர்கள் வாக்காளரை எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால், பூத் சிலிப்பை அடையாள சான்றாக காண்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை அடையாள சான்றுக்கு காண்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கியது.. வாக்காளர் வழிகாட்டி கையேடும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை  92.82 சதவீதம் பேருக்கு பூத் சிலிப்கள் வழங்கப்பட்டிருந்தன. சில வீடுகளுக்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை என ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். அதனால், விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பூத் சிலிப் கிடைக்காதவர்கள், ‘Voter Helpline’ எனும் மொபைல் போன் செயலி மற்றும் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது தங்கள் பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு, பூத் சிலிப் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுளள்து.