தாராபுரம்: தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகனும், திமுக சார்பில் கயல்விழி செல்வராஜூம் போட்டியிடுகின்றனர். தாராபுரம் புதுகாவல் நிலைய வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 134, 134ஏ, 136, 137 ஆகிய 4 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அதில், தாராபுரம் நகரில் உள்ள வார்டு எண் 5.6ல் மொத்தமாக 2,241 வாக்காளர்கள் உள்ளனர். இதில், இஸ்லாமியர்களின் வாக்குகள் மிக அதிகம். இந்த வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக கட்சிகளின் முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தும் யாரும் பணியாற்றவில்லை.
Patrikai.com official YouTube Channel