சென்னை: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 600 இடங்களில்  இன்று முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதலின்படி  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில், தமிழக அரசு வியாழக்கிழமை தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி,  இன்று (வியாழக்கிழமை  பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 600 இடங்களில் சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 160 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நநடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.